Monday, November 16, 2009

வாழ்த்துக்கள்

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்


இறையருளாலும், எம்பெருமானார் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும், இன்று 15.11.2009, ஞாயிற்றுக்கிழமை, ஹிஜ்ரி 1430 துல்காயிதா பிறை 27 . காலை 10.00 மணிக்கு, கடையநல்லூர், மஸ்ஜித் பிலால் பள்ளியில்
மணவிழா காணும், எஙகள் அன்பின் உறைவிடம், கண்ணியம்மிகு
அல்ஹாஜ் ஹாஃபிழ்
M.A. ஷைகு உதுமான் ஆலிம் ஜமாலி
அவர்களின் செல்வப்புதல்வன்

மணாளர்
M.S. முஹம்மது அபுபக்கர் சித்தீக்
மணாளி
S.M. தஸ்னீம் ஜமீலா

இவர்கள் இருவரும் நபிவழி பேணி, மறைவழி நடந்து,
இல்லறம் சிறக்க, நல்லறம் பூண்டு, பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.
அன்புடன் வாழ்த்தும்..
வடக்கு மாங்குடி
ஹாஜி A. அப்துல் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப்

(குவைத்)

Tuesday, October 27, 2009

12 FOODS OF PROPHET MUHAMMAD (PBUH)

Barley:
Good in fever, while use in a soup form.


Dates:
The Prophet (SAW) said that a house without dates has no food. It should also be eaten at the time of childbirth.

Figs:
It is a fruit from paradise and a cure for piles.


Grapes:
The Prophet (SAW) was very fond of grapes - it purifies the blood, provides vigor and health, strengthens the kidneys and clears the bowels.


Honey:
Considered the best remedy for diarrhea when mixed in hot water. It is the food of foods, drink of drinks and drug of drugs. It is used for creating appetite, strengthening the stomach, eliminating phlegm; as a meat preservative, hair conditioner, eye soother and mouthwash. It is extremely beneficial in the morning in warm water.


Melon:
The Prophet (SAW) said: 'None of your women who are pregnant and eat of water melon will fail to produce off spring that is good in countenance and good in character... '


Milk:
The Prophet (SAW) said that milk wipes away heat from the heart just as the finger wipes away sweat from the brow. It strengthens the back, improved the brain, renews vision and drives away forgetfulness.


Mushroom:
The Prophet (SAW) said that mushroom is a good cure for the eyes; it also serves as a form of birth control and arrests paralysis.


Olive Oil:
Excellent treatment for skin and hair, delays old age, and treats inflammation of the stomach.


Pomegranate:
The Prophet (SAW) said it cleanses you of Satan and evil aspirations for 40 days.


Vinegar:
A food Prophet Mohammed (SAW) used to eat with olive oil. [That's now a fashion in elite Italian Restaurants]


Water:
The Prophet (SAW) said the best drink in this world is water, when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver.

Tuesday, October 13, 2009

உலக முஸ்லிம்கள்

உலகில் 3 வது இடம்: இந்தியாவில் 16 கோடி முஸ்லிம் மக்கள்

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.

அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2 வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3 வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 20 சதவீத முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத நாடுகளில் மட்டும் 30 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்தோனேசிய மக்கள் தொகையில் 88.2 சதவீதம் பேரும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் 96.3 சதவீதம் பேரும் முஸ்லிம்கள். வங்காளதேசம், எகிப்து, நைஜீரியா, ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொராக்கோ, ஆகியவை அதிக முஸ்லிம் மக்கள் கொண்ட நாடுகள் ஆகும்.

சிரியாவில் உள்ள முஸ்லிம்களைவிட சீனாவில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். ஜோர்டான், லிபியா இரு நாட்டு முஸ்லிம்களை விட ரஷியாவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.


நன்றி "மாலை மலர்"

சிறந்த ஆட்சியாளர்

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத
கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன
கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.. அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது
கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

Thursday, October 8, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .


திருமண வாழ்த்து

மணமகன் : P.N.R. ஷேக் அப்துல் காதர்
(ரிஜ்வான்)
மணமகள் : S. பாத்திமாஜான்
(ஜாஸ்மின்)

மணநாள் : 8.10.2009 வியாழக்கிழமை
ஹிஜ்ரி 1430 ஷவ்வால் பிறை 18
மதியம் 11.30 மணி

மணமேடை : ஜாமிஆ மஸ்ஜித் (மேலப்பள்ளிவாசல்)
சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை.
.
இன்று மணவிழா காணும் இம்மணமக்கள் இருவரும்
நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,
நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ
எல்லாம் வல்ல இறைவனிடம்
இறைஞ்சுகின்றோம்.
*
அன்புடன் வாழ்த்தும். . .

A. அப்துல் முத்தலிப்
பர்வீன் முத்தலிப்
வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்

Monday, September 21, 2009

ஈத் முபாரக். . .


உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்


A. அப்துல் முத்தலிப்

A. முஹம்மது ஆரிப்
குவைத்

Saturday, August 22, 2009

ரமழான் முபாரக்


புனிதமிகு ரமழானில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் நேர்வழியில் அழைத்துச்செல்ல
இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம். ஆமீன்..

அன்புடன்.
ஹாஜி A. அப்துல் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப்
குவைத்



Monday, August 3, 2009

வருந்துகிறோம். . .


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மிகச்சிறந்த தலைமகனாகவும், அரசியலிலும் ஆன்மீகத்திலும் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அனைத்து சமுதாய மக்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பெற்ற, கேர‌ள‌ மாநில‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர்

பான‌க்காடு சைய‌து முஹ‌ம்ம‌த‌லி ஷிஹாப் த‌ங்க‌ள்

அவ‌ர்க‌ள் இறையடி சேர்ந்து விட்டதையறிந்து மிகவும்
மனவேதனை அடைகிறோம்.
( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரின் பிரிவால் வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அன்பர்கள், அன்னாரின் குடும்பத்தினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் மஅபிரத்துக்காக துஆ செய்யுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாரின் பிரிவால் வருந்தும்.,

டாக்டர் K.S. அன்வர் பாட்சா
ஹாஜி A. அப்துல் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப்
குவைத்
மின்னஞ்சல் : abuwaseema@gmail.com

Sunday, July 12, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .

திருமண வாழ்த்து

மணமகன் : P. அப்துல் ஜப்பார்
மணமகள் : A. அனீசா பர்வீன்

மணநாள் : 12.07.2009 - ஞாயிற்றுக்கிழமை,
ஹிஜ்ரி 1430 ரஜப் பிறை 18, காலை 11.30 மணி

மணமேடை : மேலப்பள்ளிவாசல்,
மேலத்திருப்பூந்துருத்தி
தஞ்சை மாவட்டம்.

இறையருளால் இல்லறம் காணும் இம்மணமக்கள் இருவரும் நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

அன்புடன் வாழ்த்தும்

B. முஹம்மது இக்பால் - அஸ்மா இக்பால்
M. முஹம்மது சல்மான்
M. பிஸ்மி பைரோஸ்
மேலத்திருப்பூந்துருத்தி - தஞ்சை மாவட்டம்

ஹாஜி A. அப்துல் முத்தலிப் – பர்வீன் முத்தலிப்
A. முஹம்மது ஆரிப் - தாஹிரா ஆரிப்
வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்

Tuesday, June 2, 2009

வாழ்த்துக்கள். . . .

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவராக மிளிர்ந்த அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்க மேலும் ஒரு மணிமகுடமாய் வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றியை வழங்கிய வல்ல ரஹ்மானுக்கே எல்லாப்புகழும். . . .

முஸ்லிம் லீக்கை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்ததுண்டு ஆனால் முஸ்லிம் லீக் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற வரலாற்று புத்தகத்தில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி, வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி வாகை சூடிய, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் சிங்கம், சமுதாய சொந்தங்களின் நெஞ்சங்களில் நிறைந்த அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு
என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். . . .

எங்கள் முஸ்லிம் லீக் கோட்டை, வேலூர் மக்களவை தொகுதியில் அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட என் சமுதாய சொந்தங்களுக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், மற்றும் வாக்காளப் பெருமக்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.....

தாய்ச்சபையின் உறுப்பினராக, நாடாளுமன்றத்தில் உங்களின் குரல் ஒலித்திட, சமுதாயம் வளம் பெற வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகின்றேன்.
ஆமீன். . .

அன்புடன். . .

தாய்ச்சபையின் தொன்டண்
A. அப்துல் முத்தலிப்
குவைத்
muthalif786@yahoo.com
abuwaseema@gmail.com

Friday, May 1, 2009

மனித நேய விரோதிகள் யார்?

இந்திய பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரங்கள், அறிக்கை போர்கள், வாக்குறுதி மழைகள் என தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிட்டது. இதில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சிபுரியும் இருபெரும் திராவிட கட்சிகள் இம்முறையும் ஒரு முஸ்லிமுக்குக்கூட வாய்ப்பு வழங்காதது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் தருகிறது. இதற்கு மூலகாரணம், முஸ்லிம்கள் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடத்திலே மேலோங்கி இருப்பதுதான். இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கடமையும், கடப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு என நான் வலியுறுத்துகிறேன். இது எனது சொந்தக் கருத்தல்ல. நமது சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களின் கருத்தாக உருப்பெற்றிருக்கிறது.

பல நேரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக பேசி மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை விளைவித்துவரும் பா.ஜ.க-வைப் போலவே அ.தி.மு.க-வும் சில நேரங்களில் சிறுபான்மையினரை சீண்டி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம்.

1. பொது சிவில் சட்டம் வேண்டும்,
2. ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்ட வேண்டும்?
3. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால்
மதமோதல்களை உருவாக்கும்

இது போன்ற பா.ஜ.க-வின் ஊதுகுழல் போல் இப்படிப்பட்ட அர்த்தமற்ற அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறது. எனவேதான் பி.ஜே.பி தமிழகத்திற்கு அவசியமில்லை. அதன் கொள்கைகளைத்தான் அ.தி.மு.க. பரப்பிவருகிறதே என அரசியல் விமர்சகர் சோலை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை இன விரோதப்போக்கை கடைபிடித்துவரும் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சீட்டு தந்தால், தங்களின் கொள்கைகளை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு அதனைப்பெற பேரம் பேசும் பெருமைக்குரியவர்கள்தான் மனித நேய மக்கள் கட்சி என்பதை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.

மனிதநேயத்திற்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறைப்பதற்காகவே முஸ்லிம் என்ற பெயரை வைப்பதற்கு அஞ்சுகின்றனர். இவர்கள்தான் முஸ்லிம்களின் காவலர்களாம்!

சமுதாயத்தின் ஒற்றுமையை, கட்டுக்கோப்பை சிதைத்து உடைத்து சின்னாபின்னப் படுத்தியதுதான் அவர்கள் செய்த மகத்தான சாதனை. சமுதாயத்தை ஓரணியில் திரட்டுகிறோம் என்று புறப்பட்டவர்கள் தாங்களே பல அணிகளாக பிரிந்ததுதான் மிச்சம். தங்களுக்கிடையே திருட்டுப்பட்டங்கள் சூட்டி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் சமுதாய வழிகாட்டிகளாம்! வெட்கமாயில்லை?

முழுக்க முழுக்க வஹ்ஹாபியிசத்தை விதைத்துவரும் உங்களுக்கும் வக்ஃப் வாரியத்திற்கும் என்ன சம்பந்தம்? கோடிக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் உள்ளது என்பதை குறிவைத்துத்தானே அந்தப்பதவியை அடம்பிடித்து வாங்கி அனுபவித்து வந்தீர்கள்? இல்லை இல்லை அந்த வாரியத்தை நெறிபடுத்தி, ஒழுங்குபடுத்தத்தான் அதனைக்கேட்டுப் பெற்றோம் என்றால், அதனை கைகழுவியதன் காரணம் என்ன? உங்களை நோக்கி சமுதாயத்திலிருந்து புறப்பட்ட எதிர்கணைகள்தானே? நாமாகவே விலகிவிடுவதுதான் கௌரவம் என்றுதானே அதனை ராஜினாமா செய்தீர்கள்? சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று இனியும் பகல்கனவு காணாதீர்கள்.

நீங்கள் யார்? எந்தப் போர்வையில் உலா வருகிறீர்கள் என்பதையெல்லாம் முஸ்லிம் லீக் தோலுரித்துக்காட்ட முனைந்து விட்டதால் என்னப்பேச்சு பேசுகிறோம் என்றுகூட சிந்திக்காமல் அநாகரீகமாக முஸ்லிம் லீக்கை பி.ஜே.பியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் சகோதரர் ஜவாஹிருல்லாஹ். நாவடக்கம் வேண்டும். நாவு நரகத்தற்கு இழுத்துச்செல்லும் என்ற நபிமொழிக் கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பி.ஜே.பியைப் போலவே சமூக ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை பாழ்படுத்துபவர்கள் என்று உங்களை நோக்கித்தான் மக்கள் கைநீட்டிப் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஏதோ தமிழக முஸ்லிம்கள் உங்களைத்தான் ஆதரிக்கிறார்கள், முஸ்லிம் லீக்கை கைவிட்டுவிட்டார்கள் என்ற உங்களின் தவறான எண்ணம், அகங்காரம், ஆணவம் எல்லாம் உங்களை இந்தத்தேர்தலில் தலைகுணிய செய்துவிடும் என்பது மட்டும் திண்ணம். இன்ஷா அல்லாஹ். . .

உங்கள் தலைமை நிர்வாகிகளை எடுத்துக்கொண்டாலும், செயற்குழு, பொதுக்குழு என்று எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் வஹ்ஹாபியிச சாயலைக் கொண்டவர்கள்தானே? அப்படி இருக்க, நாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பு என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? என்று நான் வினவ கடமைப்பட்டுள்ளேன். விடையுண்டா?

இடஒதுக்கீடை தி.மு.க. அரசு நடைமுறைப் படுத்தவில்லை என்று கூறி ஒரு கூட்டம் அ.தி.மு.க-வின் பக்கமும், இல்லை இல்லை கலைஞர்தான் இந்த மகத்தான இடஒதுக்கீட்டையே நம் சமுதாயத்திற்கு வழங்கினார் என்று ஒரு குழுவும் பிரிந்து நின்று பிரச்சார சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்றைக்கு எந்தக் காரணத்தை சொல்லி எதிர்த்தார்களோ அவர்கள் தி.மு.க-வை ஆதரிக்க, நன்றி கெட்டவர்களாய் ஆதரித்தவர்கள் இன்றைக்கு தி.மு.க-வை எதிர்க்கிறார்கள். இந்த இரு பிரிவினரும்தான் சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மஹல்லாக்களில், பள்ளிகளில் பிரிவினைகளை உருவாக்க முனைந்தவர்கள் என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் எழுதிப்போடப்பட்டுள்ள போர்டு – கரும்பலகைகளே போதிய ஆதாரமாகும்.

எனவே இவர்களை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லோரும் ஒன்றாக புறக்கணிப்பார்கள் என்பதில் முள்ளின் முனையளவும் சந்தேகமில்லை.

நன்றி - காயல் இளம்பிறையான் (kayalpirai@gmail.com), முதுவை ஹிதாயத்

Sunday, April 12, 2009

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை,
உழைப்பை - தொண்டூழியத்தை - கருணையோடு அங்கீகரித்து
இறைவா ஏற்றுக் கொள்
பிழைகளைப்பொறுத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் வாழ்வைக் கொடுத்தருள்!-
***எழுத்தரசு ஏ.எம். ஹனீப்

சிறகில்லாமல் பறந்து போனசிராஜுல் மில்லத் செம்மலே!
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே!கபருஸ்தானில் மறைந்தபோதிலும் கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே - நம்கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்-
***நாகூர் சலீம்

தலைவரே! உங்களின் தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு
எங்கள் செவிகளில் மரணித்து விடவில்லை....
எங்களின்அரசியல் பயணம்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம்!உங்களின் வழிகாட்டுதல்மரணித்துவிட வில்லை.....
***கவிஞர் இஸட். ஜபருல்லாஹ்

வாழிய சிராஜுல் மில்லத்!
வாழிய அமீனுல் உம்மத்!
வாழிய அப்துஸ் ஸமது
வல்லவன் அருளைக் கொண்டே ஊழியம் செய்து (உ) வந்த உன்னத நெஞ்சே வாழ்வில் நாழிகை தோறும் செய்த நன்மையுள் என்றும் வாழ்க!
***ஏம்பல் தஜம்முல் முஹம்மது

அன்புப் பெட்டகமே
அறிவுக் கருவூலமே
சிராஜுல் மில்லத்தே
நும் நினைவில் எம் பயணம் என்றும் தொடரும்
***வடக்குகோட்டார் வ.மு. செய்யது அஹமது

சோபனச் சுரங்கமே! - எங்கள் சொப்பன அரங்கமே
சேமச் சிகரமே! சிராஜுல் மில்லத்தே!
இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே!
உங்கள் புகழ் நாரின் பூக்களல்ல, நட்சத்திரப் பூக்கள்
என்றும் உதிராதவை உயர்ந்தவை!
***தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர்! -
என்றும் பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய் தலைநிமிர வைத்தார் கலைநோக்கு கவிதைத் திறன் - சொல்லாற்றல் மிக்கவர்! -
அப்துஸ் ஸமதெனம் சமுதாய விளக்கு! -
இஸ்லாம் அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு! -
***கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி

பல்வேறு சாதனைகள் படைத்திட்ட சாதனையாளர்!
நல்லோர்கள் நாவினிலே நாளும் வாழும் சிராஜுல் மில்லத்.
***சீர்காழி இறையன்பன்

மதுப்புதுவை மாநிலத்தில்
பிறந்தபோதும்
மதுவிலக்கு கொள்கையிலே
பிடித்திருக்கும்!
எது புதுமை என்பதிலே
தெளிவிருக்கும்
என் தலைவரின் புகழென்றும்
நிலைத்திருக்கும்!
***கவிஞர் கிளியனூர் அஜீஸ்

என்னவென்று எழுத்தில் சொல்ல
எப்படிதான் அழுது சொல்ல
பொன்னுடலை அடக்கம் செய்தோம்
பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம்!
***கவிஞர் இக்பால் ராஜா

நண்பர் ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் அவர்களுக்கு நன்றி . . .

Sunday, March 22, 2009

சகோ. ஜவாஹிருல்லாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

முஸ்லிம் லீக் அழிவின் விழிம்பிலே நிற்பதாக திருவாய் மலர்ந்துள்ளார் மமுகவின் அறிவிக்கப்படாத தலைவர் ஜவாஹிருல்லாஹ். இன்றைய தினமலரிலே இச்செய்தி வெளிவந்துள்ளது.

ஏகத்துவப் பாசறையின் முன்னாள் நண்பர்கள் அரசியல் வாதிகளான பிறகு, இப்போது ஜோசியக் காரர்களாகவும் புதுப் பரிணாமம் எடுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அரசியலுக்கு வந்த பிறகு, இவர்கள் இப்படியெல்லாம் ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருப்பது ஆச்சரியம் இல்லை தான்.

ஒன்றை மட்டும் இந்த சந்தர்ப்பவாதிகள் இப்போது உணர்ந்திருப்பது நமக்குத் தெரிகின்றது.

முஸ்லிம் லீக் உள்ள வரை தங்கள் உள்ளடி வேலைகள் சமுதாயத்திலும்,அரசியல் அரங்கிலும் செல்லாது என்பது தான் அது.

கலைஞர் அரசு கொடுத்துள்ள சிவப்பு விளக்கு ஊர்தியிலே தனது பொதுச் செயலாளர் பவனி வரும் போது, ஜெயலலிதாவோடும் நாங்கள் கூட்டணி பேரம் பேசுவோம் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் ஒரு அரசியல் வியாபாரி, முஸ்லிம் லீகின் எதிர் காலம் பற்றி கணிப்பதற்கு யோக்கியதையில்லை. ஆயிரத்து நூறாண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியாக முஸ்லிம் லீகைப் பார்ப்பதால் தான் சங்பரிவாரங்களும், பிஜேபியும் முஸ்லிம் லீகை அழிப்பதற்கு கங்கணம் கட்டி வேலை செய்து வருகின்றார்கள்.

அத்தகையோரின் வயிற்றில் பால் வார்க்கும் வேலையை இவர்களும் செய்ய ஆரம்பித்துள்ளதை சமுதாயம் உற்று கவனிக்க ஆரம்பித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னால் இவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று ராமகோபாலன் அறிக்கை வெளியிட்ட போது, அதற்கு கடும் கண்டனத்தை முஸ்லிம் லீக் பதிவு செய்தது.

அரசியல் மாச்சரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ,சமுதாய நலன் கருதி செயல்படும் இயக்கம் முஸ்லிம் லீக். சமுதாயத் தாய்ச்சபையும் அது தான். அதனால் தான் அண்ணல் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை செல்வதற்கு முஸ்லிம் லீக் துணைநின்றது.

இதன் மூலம் எத்தகைய பலன் நாம் பெற்றோம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை வெளிச்சம் போட்டு , வியாபாரம் செய்யும் அவசியமும் நமக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சுயமாகத் தீர்வு சொல்ல முடியாதோர், முஸ்லிம் லீகின் தலைவர்கள் தந்த தீர்வுகளை, ஊரெல்லாம் தங்கள் உயரிய கண்டுபிடிப்பாக இரவல் அரசியலாக நடத்தி வருவது நாம் அறியாததல்ல.

முஸ்லிம் என்று சொல்வதற்கு முதுகெலும்பில்லாமல், இரவல் பெயர் சூட்டிக் கொண்டு வந்தால் மற்ற சமுதாய மக்களையும் நம் பக்கம் இழுத்து விடலாம் என்று கனாக்காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும் காட்டித் தந்த வழியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பீடு நடைபோடுகின்றது.

சமூக நல்லிணக்கம் குறித்தும், மனித நேயம் குறித்தும் பேசுவதற்கு ஒரு முஸ்லிமை விடத் தகுதி படைத்தவர் யாருமில்லை என்ற உறுதியான நம்பிக்கை நமக்கிருக்கின்றது.

தன்னை முஸ்லிம் என்று அழைத்துக் கொள்வதை விட அழகான சொல் எதுவுமில்லை என்ற அல் குர்ஆனின் அறை கூவலை முஸ்லிம் லீக் பாராளுமன்றமாக இருந்தாலும் எதிரொலிக்கும்.

ஐக்கிய நாட்டுச் சபையாக இருந்தாலும் நம் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் என்று தான் அறியப்படுள்ளார்கள்.

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாமின் மார்க்கத்துச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் முஸ்லிம் லீகர்கள் எந்தத் தயக்கமும் கொள்வதில்லை.

அல்லாஹ்வும், அவனின் திருத் தூதரும் இட்ட அழகிய பெயரையே நம் அன்னையும் , தந்தையும் நமக்குத் தந்தனர்.

அப்பெயரிலேயே பிறந்தோம்.அல்லாஹ்வின் அளப்பெரும் பேரருளால் அத்திருநாமத்தாலேயே அழைக்கவும்படுகின்றோம்.அவனளவில் மீளும் போதும் இன்ஷா அல்லாஹ் அத்திருநாமத்துடனேயே செல்வோம்.

முஸ்லிம் என்றே முழங்குவோம். முஸ்லிம் லீக்கிலே அரசியல் அறப் பணி செய்வோம்.

இதயங்களை இணைப்போம் ! இந்தியாவை வல்லரசாக்குவோம் !!

இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ். சட்டச் சிக்கல் வந்தால் சந்திப்போம்!

சதிகளைச் சமராடுவோம்!! சமூக நீதி சமைப்போம் !!!

இரவல் பெயர் வாங்கி அரசியல் நடத்தும் அவல நிலைக்குச் செல்ல மாட்டோம். யா அல்லாஹ்!

அத்தகைய இழிநிலையிலிருந்து எங்களைக் காப்பாயாக!!

முஸ்லிம் லீக்கின் அழிவில் தான் தங்கள் அரசியல் வாழ்வை நிலைப்படுத்தும் பரிதாப சூழ்நிலைக்கு சகோதரர் ஜவாஹிருல்லாஹ்வின் புது அரசியல் கட்சி தள்ளப்பட்டிருந்தால் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஹக்கு சுப்ஹானஹுவதஆலா பல்வேறு சோதனைகளிலிருந்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றி, பவனி வரச் செய்துள்ளான்.

பண்டிதர்களிடத்திலிருந்தும், படேல்களிடத்திலிருந்தும் காப்பாற்றிய அல்லாஹ் தான் பாதகர்களிடத்திலிருந்தும் காப்பான் என்ற ஆழ்ந்த தக்வாவின் அடிப்படையிலே முஸ்லிம் லீகின் நெடும் பயணம் தொடர்கின்றது.

முஸ்லிம் லீக்கின் அழிவை எதிர்நோக்கி காத்திருப்போர் ஏமாற்றத்தின் விரக்தியிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தங்களின் கட்சிகளைக் கலைத்து விட்டு , தாய்ச் சபையாம் முஸ்லிம் லீக்கிலே தங்களை இணைத்துக் கொண்டு சமுதாயப் பணியாற்ற தோள் கொடுக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். நல்லோர்களின் அவாவும் அதுவே!

ஏ. லியாக்கத் அலி பொதுச் செயலாளர்
முஹம்மது தாஹா இணைச் செயலாளர்
ஹமீது ரஹ்மான் இணைச் செயலாளர்
காயிதே மில்லத் பேரவை, யு. ஏ. இ.,

நன்றி : தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
அமீரக காயிதெ மில்லத் பேரவை

Thursday, January 15, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .

திருமண வாழ்த்து

மணமகன் :
A. முஹம்மது ஆரிப்
மணமகள் : T. தாஹிரா பானு

மணநாள் : 15.01.2009 வியாழக்கிழமை,
ஹிஜ்ரி 1430 முஹர்ரம் பிறை 17,
மதியம் 12.00 மணி
மணமேடை :
அலிப் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம்,
மேல வழுத்தூர்.

இன்று மணவிழா காணும் இம்மணமக்கள் இருவரும்
நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,
நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம்.

இம்மண விழாவிற்கு வருகைதந்து வாழ்த்தி சிறப்பித்த அனைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன் வாழ்த்தும். . .

அண்ணன் A. அப்துல் முத்தலிப்
பர்வீன் முத்தலிப்

வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்

Tuesday, January 6, 2009

உங்களுக்கு வேண்டுமா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)

உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)