Sunday, April 12, 2009

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை,
உழைப்பை - தொண்டூழியத்தை - கருணையோடு அங்கீகரித்து
இறைவா ஏற்றுக் கொள்
பிழைகளைப்பொறுத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் வாழ்வைக் கொடுத்தருள்!-
***எழுத்தரசு ஏ.எம். ஹனீப்

சிறகில்லாமல் பறந்து போனசிராஜுல் மில்லத் செம்மலே!
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே!கபருஸ்தானில் மறைந்தபோதிலும் கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே - நம்கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்-
***நாகூர் சலீம்

தலைவரே! உங்களின் தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு
எங்கள் செவிகளில் மரணித்து விடவில்லை....
எங்களின்அரசியல் பயணம்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம்!உங்களின் வழிகாட்டுதல்மரணித்துவிட வில்லை.....
***கவிஞர் இஸட். ஜபருல்லாஹ்

வாழிய சிராஜுல் மில்லத்!
வாழிய அமீனுல் உம்மத்!
வாழிய அப்துஸ் ஸமது
வல்லவன் அருளைக் கொண்டே ஊழியம் செய்து (உ) வந்த உன்னத நெஞ்சே வாழ்வில் நாழிகை தோறும் செய்த நன்மையுள் என்றும் வாழ்க!
***ஏம்பல் தஜம்முல் முஹம்மது

அன்புப் பெட்டகமே
அறிவுக் கருவூலமே
சிராஜுல் மில்லத்தே
நும் நினைவில் எம் பயணம் என்றும் தொடரும்
***வடக்குகோட்டார் வ.மு. செய்யது அஹமது

சோபனச் சுரங்கமே! - எங்கள் சொப்பன அரங்கமே
சேமச் சிகரமே! சிராஜுல் மில்லத்தே!
இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே!
உங்கள் புகழ் நாரின் பூக்களல்ல, நட்சத்திரப் பூக்கள்
என்றும் உதிராதவை உயர்ந்தவை!
***தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர்! -
என்றும் பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய் தலைநிமிர வைத்தார் கலைநோக்கு கவிதைத் திறன் - சொல்லாற்றல் மிக்கவர்! -
அப்துஸ் ஸமதெனம் சமுதாய விளக்கு! -
இஸ்லாம் அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு! -
***கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி

பல்வேறு சாதனைகள் படைத்திட்ட சாதனையாளர்!
நல்லோர்கள் நாவினிலே நாளும் வாழும் சிராஜுல் மில்லத்.
***சீர்காழி இறையன்பன்

மதுப்புதுவை மாநிலத்தில்
பிறந்தபோதும்
மதுவிலக்கு கொள்கையிலே
பிடித்திருக்கும்!
எது புதுமை என்பதிலே
தெளிவிருக்கும்
என் தலைவரின் புகழென்றும்
நிலைத்திருக்கும்!
***கவிஞர் கிளியனூர் அஜீஸ்

என்னவென்று எழுத்தில் சொல்ல
எப்படிதான் அழுது சொல்ல
பொன்னுடலை அடக்கம் செய்தோம்
பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம்!
***கவிஞர் இக்பால் ராஜா

நண்பர் ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் அவர்களுக்கு நன்றி . . .