Sunday, November 30, 2008

ஆர்பாட்டத்தில் அணிவகுக்கும் பெண்களே! இதைகொஞ்சம் படியுங்கள்!!

தமிழகத்தில் எண்பதுகளுக்கு முன்னால், முஸ்லீம் பெண்கள் அவசிய,அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வருபவர்களாக இருந்தனர்.[சிலர் விதிவிலக்காக இருந்திருக்கலாம்] ஆனால் தவ்ஹீத் எழுச்சிக்கு பின்னால், நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும்கடமை பெண்களுக்கும் உண்டு என்ற பிரச்சாரத்தின் காரணமாகபல்லாயிரம் ஆண்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் மேடையேறி பெண்கள் கர்ஜிக்கிறார்கள். ஆர்பாட்டம் என்ற பெயரால் அந்நிய ஆடவர்கள் முன் அணிவகுத்து நின்று தங்களின் குரலை உயர்த்தி கூக்குரலிடுகிறார்கள். கணவர் வெளிநாட்டில் இருக்க, மஹ்ரமில்லாமல் பயணம் செய்து சிலர் மாநாட்டில் பங்கெடுக்கிறார்கள். இப்படி பெண்களை தமது அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கும் சமுதாய தலைவர்கள் மார்க்கத்தில் இதற்கு அணுமதி உண்டு என்று கூறி சில ஆதாரங்களை முன்வைக்கிறார்கள். அந்த ஆதாரங்கள் சரியா என்பதை முதலில் பார்ப்போம்.'நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கைகொண்ட பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள் தீமையை தடுப்பார்கள்.'[அல்-குரான்]இந்த வசனத்தை ஆதாரமாக காட்டும் அவர்கள், நபி[ஸல்] காலத்தில் எந்த நபித்தோழியர்கள் மேடையேறி ஆண்கள் முன்னால் கர்ஜித்தார்கள்..?
எந்த ஆர்பாட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்று காட்ட தயாரா..?மிக அதிகமான ஹதீஸ்களை மணனம் செய்து அறிவித்த அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி]அவர்கள், தாவா செய்கிறேன் என்ற பெயரில் ஆண்களை திரட்டி வைத்துக்கொண்டு பேசியதுண்டா..? சந்தேகம் என்று வீட்டு தேடி வந்தவர்களுக்கே மார்க்கத்தை சொல்லியுள்ளார்கள். மேலும் ரசூல்[ஸல்] அவர்கள், பனுசுளைம் குலத்தவருடன், எழுபது நபிதோழர்களை தாவா செய்ய அனுப்பினார்களே, அதுமாதிரி எந்த பெண்கள் படையையாவது தாவா செய்ய அனுப்பினார்களா..? குறைந்தபட்சம் பெண்கள் மத்தியிலாவது தாவா செய்ய பெண்கள் படையை நபி[ஸல்] அனுப்பியதுண்டா..? எனவே, இந்த வசனத்தை ஆதாரமாககாட்டமுடியாது. அடுத்து ,ரசூல்[ஸல்] அவர்கள் போர்களத்திற்கு தம்முடைய மனைவியரில் யாரேனும் ஒருவரை அழைத்து சென்றதையும், சில நபித்தோழியர்கள் போரில் உதவி செய்ததையும் ஆதாரமாக வைத்து, முஸ்லீம் பெண்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்வது ஏற்ப்புடையதல்ல. ரசூல்[ஸல்] அவர்கள் பெண்களை போர்களத்திற்கு வாருங்கள் என்று எப்போதும் அழைப்பு விடுத்ததில்லை. அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள், அறிவிக்கிறார்கள்.
நான் ரசூல்[ஸல்] அவர்களிடத்தில் நாங்களும் [பெண்களும்] ஜிஹாத் செய்யலாமா..? எனக்கேட்டேன். அதற்கு நபி[ஸல்] பெண்களுடைய சிறந்த ஜிஹாத் பாவம் கலக்காத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் ஆகும். [புஹாரி2784] என்று நபி[ஸல்] கூறிய பொன்மொழியை இங்கு நினைவு படுத்துகிறோம். ஒரு வாதத்திற்கு இதை ஆதாரமாக கொண்டால்கூட தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் தங்கள் மனைவியரில் ஒருவரையும், பணிவிடை செய்வதற்காக மஹ்ரமான பெண் வாலண்டியர்கள் சிலரையும் அழைத்து செல்லலாம். ஏனெனில் அன்று போர்களத்தில் பங்கெடுத்த பெண்கள் கத்திக்கொண்டிருக்கவில்லை. மாறாக காயம்பட்டோருக்கு உதவிகள்தான் செய்துள்ளனர். எனவே இதை ஆதாரமாக கொண்டு சமுதாய பெண்கள் அனைவரையும் ரோட்டில் நிறுத்துவது சரியல்ல.பெண்கள் வீட்டில்தான் இருக்கவேண்டியவர்கள் என்பதற்குஉள்ள ஏராளமான ஆதாரங்களில் சில;அவரது [மர்யமின்] அறைக்கு ஜக்கரிய்யா [அலை] சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக்கண்டு, மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார்கள். [வசனசுருக்கம், சூரா ஆல இம்ரான்]இந்தவசனத்தில் மர்யம்[அலை] அவர்களை ஜக்கரிய்யா[அலை] அவர்கள் அறையிலேயே எப்போதும் பார்த்துள்ளார்கள். ரோட்டில் அல்ல.போருக்கு செல்லாமல் தங்கிவிட்டவர்களை பற்றி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்;வீட்டோடு இருக்கும் பெண்களைப்போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக்கொன்டார்கள்.[வசனசுருக்கம் - சூரா அல்தவ்பா]இந்தவசனத்திலும் அல்லாஹ் பெண்கள் வீட்டில் இருக்கவேண்டியவர்கள் என்பதால்தான் அவர்களை போருக்கு செல்லாதோருக்கு மேற்கோள் காட்டுகிறான்.உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக்காலத்தில் வெளிப்படுத்தி திரிந்ததுபோல் திரியாதீர்கள்.[வசனசுருக்கம் - சூரா அல் அஹ்ஸாப் ]இந்த வசனம் நபியின் மனைவியருக்கு மட்டும் பொருந்தும் என்று நாவலர்கள் கூறவருவார்களேயானால், நபியின் மனைவியரல்லாத மற்ற பெண்கள் அறியாமை காலத்தைப்போல் வெளிப்படுத்திக்கொண்டு திரியலாம்என கூறுவார்களா..?''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி)இந்த ஹதீஸ் மறைவாக இருக்கவேண்டியவர்கள் பெண்கள்என்று தெளிவாக கூறுகிறது. இன்னும் எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. விரிவஞ்சி தவிர்த்துள்ளோம்.எனவே பெண்களே,உங்கள் வீடுகளில் தங்கியிருந்து அல்லாஹ்வின் அருளை பெற முன்வாருங்கள்.
நன்றி : www.mugavai-abbas.blogspot.com நிழல்களும் நிஜங்களும்

No comments: