Thursday, September 11, 2008

செயலும் விளைவும்

அன்றும், இன்றும்

இஸ்லாத்திற்காக

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
- இஸ்லாம் அனைத்து மண்ணையும் மீட்கொண்டது..

பிலால் (ரழி) அவர்கள் நெஞ்சின் மீது பாறாங்கற்களை தாங்கினார்கள்
- உறுதியான ஈமானிய நெஞ்சங்கள் உருவானது

கப்பாப் (ரழி) அவர்கள் எரிதழலில் பிணைக்கப்பட்டார்கள்
- இஸ்லாம் சூரிய ஒளியாக பிரகாசித்தது

குபைப் (ரழி) தூக்கு கயிற்றை முத்தமிட்டார்கள்
- அல்லாஹ்வின் கயிற்றை ஆயிராமாயிரம் பேர் முத்தமிடுகிறார்கள்

முஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்கள் சொத்துக்களை தூக்கி எறிந்தார்கள்
- சாம்ராஜ்ஜியங்கள் மண்டியிட்டன

யாஸிர் (ரழி) இரு கூறாக பிளக்கப்பட்டார்கள்
- இன்றும் யாஸிர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.

ஹம்ஸா (ரழி) அவர்களின் ஈரல் துண்டாடப்பட்டது
- ஈமானிய சாரல்கள் பொழிந்து கொண்டிருக்கிறது...

அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான்
அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள் –
98:8

தியாகங்களால் வளர்ந்தது இஸ்லாம். செந்நீரை தண்ணீராக ஊற்றி வளர்ந்த மார்க்கம். என்ன செய்கிறோம் நாம்?

நன்றி: இஸ்லாமிய நூலகம், துபை

No comments: